தற்போது RBI கொண்டு வந்திருக்கும் தங்க நகை கடன் அடகு விதிகளால் பொதுமக்களுக்கு பழைய தங்க நகைகளை அடகு வைப்பதில் பல குழப்பங்களும் சிக்கல்களும் முளைத்துள்ளன. குறிப்பாக பலருக்கும் பில் இல்லாத பழைய நகைகளை அடகு வைப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் இனி தங்க நகைகளை அடகு வைக்கும்போது அதற்கு உரிமையாளர் தாங்கள் தான் என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று RBI – யின் புதிய வரைவு விதிமுறையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது RBI கொண்டு வந்திருக்கும் தங்க நகை கடனை அடகு வரைவு விதிகளின் படி பில் இல்லாத நகைகளை அடகு வைக்க முடியாது. ஒரு நகை அடகு வைக்கப்படும் பட்சத்தில் அதன் பில் உங்களிடம் இல்லாவிட்டால் நகை அடகு கடைகள் உங்கள் நகையை எடுத்துக்கொள்ளாது. இந்நிலையில் RBI-யின் இந்த வரைவு விதியில் சில சலுகைகள் கொண்டு வரப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அடையாளம் மற்றும் முகவரியைச் சரிபார்க்க ஆதார் அட்டை, PAN Card, வாக்காளர் ID அல்லது பில்கள் போன்ற ஸ்திரமான KYC ஆவணங்களை வழங்க கோரப்படலாம். மேலும் பில் இல்லாத நிலையில், தங்கத்தின் உரிமையாளர் நீங்கள் தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ஃபார்மில் நீங்கள் கையெழுத்திட்டு அதில் இந்த தங்கம் என்னுடையதுதான், அதை நான் வேறு எவரிடம் இருந்தும் பெறவில்லை. இது எனக்கு சொந்தமானது என்று நீங்கள் உறுதி அளிக்க வேண்டி இருக்கலாம்.
மட்டுமல்லாமல் பில் இல்லாத தங்க நகைகளை அடகு வைக்கும் பட்சத்தில் அதற்கு கொடுக்கப்படும் பணம் சதவீதத்தில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.