“திருப்பாச்சி அருவாள, தீட்டிகிட்டு வாடா வாடா” என்று சினிமா பாட்டுக்கு ரீல்ஸில் கையில் அறிவால் ஏந்தி தற்போது கொலைவழக்கில் கம்பி எண்ணும் தடகளவீரர் சுர்ஜித்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த கவின் என்ற வாலிபர் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கவின் காதலி சகோதரர் இந்த வழக்கில் கொலை குற்றவாளி தடகளவீரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்ட சுர்ஜித்தின் அப்பா சரவணன், தாய் கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் காவல் துணை ஆய்வாளர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சுர்ஜித்தின் தாய் தந்தையை கைது செய்தல் தான் கவினின் உடலை வாங்குவேன் என்று கவின் தந்தை உறுதியாக சொன்ன நிலையில், அரசியல் பிரபலங்கள், அமைச்சர்கள், கனிமொழி என ஏராளமானோர் சென்று கவினின் தாய் தந்தைக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்..இருப்பினும் கவினின் பெற்றோர் சுர்ஜித்தின் தாய், தந்தையை கைது செய்யவேண்டும் அதுவரை கவினின் உடலையும், உதவியையும் வாங்கமாட்டேன் என்று தீர்க்கமாக இருக்கின்றனர்.
அதன் பின்னர் அமைச்சர்கள், காவல் ஆய்வாரள்கள் நடத்திய ஆலோசனையில் இந்த வழக்கின் குற்றவாளி சுர்ஜித்தின் தந்தை சரவணனை கைது செய்ததாக அறிவித்தனர்..இந்த நிலையில் சுர்ஜித் கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அப்லோடு செய்துள்ளார்.
தற்போது இந்த காட்சி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதனைப் பார்த்த நெட்டிசங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், சுர்ஜித்தை தடகளப்போட்டியில் வழியிலேயே தடம் மாறாமல் நல்ல வேலைக்கு அனுப்பிவைத்திருக்கலாம்,இன்ஸ்டாகிராமில் கையில் கத்தி வைத்திருப்பதை அப்பொழுதே கண்டித்தும் இருந்திருக்கலாம், ஆனால் இதை செய்யத் தவறிய தந்தை தன்னுடைய கடமையில் இருந்து தவிறியிருக்கிறார் என்று என்று கூறுகின்றனர்..மேலும்,குறிப்பாக அவர் காவல் துணை ஆய்வாளர் என்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது…