Thursday, December 26, 2024

மூன்றாம் கண்

பிரிக்க முடியாதது எதுவெனக் கேட்டால் நகமும் சதையும் என்போம்.
ஆனால், இக்கால சிறுவர், இளைஞர்களையும் செல்போனையும் பிரிக்கவே
பிரிக்க முடியாது- அந்தளவுக்கு செல்போனோடு ஒன்றிப்போயுள்ளனர்.

எதிரில் வருபவரைக்கூடப் பார்க்காமல் செல்போன் பார்த்தபடியே
நடந்துசெல்வோர் அநேகம்பேர். செல்போன் பார்த்துக்கொண்டே
தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் சிக்கி ஆபத்தை சந்திப்போரும்
பலர்.

எதிரில் இருக்கும் திறந்தவெளி சாக்கடையைக்கூடக் கவனிக்காமல்
செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கும் செல்போன்வாசிகளை இந்தப்
பாதிப்புகளிலிருந்து விடுபட செயற்கையான கண் ஒன்றை உருவாக்கி
சாதனை படைத்துள்ளார் தென்கொரிய இளைஞர் .

‘மூன்றாம் கண்’ என்று அழைக்கப்படும் இந்தப் பிளாஸ்டிக் கண்
நெற்றியில் பொருத்திக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் கைரோ என்னும் சென்சார், ஸ்பீக்கர் உள்ளது. இதனை
நெற்றியில் மாட்டிக்கொண்டதும் இந்த சென்சார் இரண்டு மீட்டர்
தொலைவுக்குள் வரவுள்ள ஆபத்தை சுட்டிக்காட்டும்.

தலையைக் குனிந்தாலே இந்தப் பிளாஸ்டிக் கண்ணிலுள்ள இமைகள்
செயல்படத் தொடங்கும்.

எதிரில் தடைகள் இருந்தால் இந்தக் கருவி எச்சரிக்கும். அப்படியும்
செல்போன் பார்ப்பதிலேயே மூழ்கியிருந்தால், சாக்கடைக்குள் விழவேண்டியதான்.

செல்போனைக் கவனமாக யூஸ் பண்ணுங்க…விபத்தை விலைகொடுத்து
வாங்காதீங்க…

Latest news