பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, இனி பாமக தலைவர் நான் தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். மேலும் பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பாமக பொருளாளர் திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே . அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு என கூறியுள்ளார்.