Saturday, September 6, 2025

என்னிடம் விளக்கம் கேட்காமலேயே எனது பதவியை பறித்துள்ளார்கள் – செங்கோட்டையன் கருத்து

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பொறுப்புகள் பறிக்கப்பட்ட நிலையில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை.

இந்த பரபரப்பான சுழலில், செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என்று கட்சி நலனுக்காகவே கூறினேன். எனது நலனுக்காக அல்ல. .

ஜனநாயக முறைப்படி, பொறுப்புகளில் இருந்து நீக்கும் முன்பு என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் என்னிடம் விளக்கம் கேட்காமலேயே எனது பதவியை பறித்துள்ளார்கள். என் மீதான நடவடிக்கைகளுக்கு காலம் பதில் சொல்லும். எனது ஒருங்கிணைப்பு பணி தொடரும் என கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News