Sunday, August 31, 2025
HTML tutorial

“என்னை குறிவைத்து பொய் வழக்கு போடுகிறார்கள்” – கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்கலங்கியபடி பேசினார். அப்போது அவர் பேசுகையில், எடப்பாடியாரின் பிரச்சார முகமாக உள்ளதால் என்னை குறிவைத்து பொய் வழக்கு போடுகின்றனர். திமுக அரசு என் மீது பொய்யாக வழக்கு பதிந்து கைது செய்தது. என்னை மிரட்டி பணியவைக்க நினைத்தது.

என்னை எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் ஆக்கிய சிவகாசி தொகுதியில்தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெல்வேன். அதிமுக- பாஜகவும் பலமாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாக எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி சந்திப்பு இருந்திருக்கிறது” என்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News