Wednesday, February 5, 2025

இந்த இரண்ட மட்டும் கலந்து குடிக்கவே கூடாது!! ஏன் தெரியுமா?

பொதுவாக நம்மில் பலருக்கு பால் அல்லது டீ போன்றவற்றில் சக்கரைக்கு பதிலாக வெள்ளம் கலந்து குடிக்கும் பழக்கம் காணப்படுகிறது அப்படி குடிப்பது நல்லதா என்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

காலையில் எழுந்தவுடனே வெல்லம் கலந்த தேநீருடன் அந்தப் தினத்தை தொடங் கவிரும்புகிறார்கள். ஆனால் ஆயுர்வேதத்தின் படி, இது ஒரு தவறான கலவையாகும் என கூறப்படுகிறது.வெல்லம் ஆயுர்வேதத்தில் மருத்துவ குணங்களின் பொக்கிஷமாக கருதப்படுகிறது.

ஆனால் அதனை டீ அல்லது பாலில் கலந்து குடிக்கும்பொழுது இந்த கலவை ஒரு தவறான கலவையாக கருதப்படுகிறது ஏன் என்றால் இந்த இரண்டையும் இணைத்து சாப்பிடும்பொழுது உடலுக்கு பல விதமான தீமைகள் ஏற்படுமாம் வெல்லம் வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் போது, பால் கலந்த டீயுடன் குடிக்கும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என சொல்லப்படுகிறது.

ஆயுர்வேதத்தின் படி உணவுகளின் கலவை தவறாகும்பொழுது செரிமானத்தை பாதித்து நச்சு  கழிவுகளை ஏற்படுத்துமென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது அஜீரணம்,வாயு,வயிற்றில் அமிலத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்துமாம்.பால் அல்லது டீ-யில் சக்கரை அல்லது பானக்கற்கண்டு சேர்ந்து குடிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news