Wednesday, July 16, 2025

வங்கி சேமிப்பு திட்டங்கள் மட்டுமல்ல! இந்த முதலீட்டு திட்டங்களும் அட்டகாசமான வருமானத்தை தரும்

முதலீடு என்று சொன்னாலே வங்கி சேமிப்பு திட்டங்கள் தான் பலரின் நினைவுக்கு வரும். அதற்கு தான் பல நேரங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் வங்கி சேமிப்புகளை தாண்டி மற்ற சில அரசின் திட்டங்களும் நல்ல லாபம் தரக் கூடியதாக இருக்கின்றன.

பிப்ரவரி முதல் இந்திய ரிசர்வ் வங்கி மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளி அதாவது 1% ரெப்போ விகிதத்தைக் குறைத்தது. இதனையடுத்து பல முக்கிய வங்கிகள் நிலையான வைப்புத்தொகை மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்திருந்தன.

Also Read : கேஷ்பேக் ஆஃபர்களை அள்ளித்தரும் கிரெடிட் கார்டுகள் : எதை தேர்வு செய்யலாம்?

ஜூன் 30, 2025 அன்று வரை இருந்த நடைமுறைப்படி பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF, தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்று சொல்லப்படும் NSC மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமான SCSS போன்ற திட்டங்களின் விகிதங்கள் மாற்றப்படவில்லை. இதனால் அவை 2025–26 நிதியாண்டின் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்குப் பொருந்தும்.

இந்நிலையில் fixed deposit முதலீடுகளை திட்டமிடுபவர்கள், அரசு சிறு சேமிப்புத் திட்டங்கள் கொடுக்கும் வட்டி விகிதங்களை, SBI, HDFC, ICICI வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற வங்கிகளின் வட்டி விகிதங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. 5 வருட குறுகிய காலத்திற்கு முதலீடு செய்ய ஒருவர் விரும்பினால் இப்போது சொல்லப்படும் அரசு திட்டங்கள் நல்ல வருமானத்தை வழங்குகின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Also Read : அதிக முதலீடு வேண்டாம்.., ரூ.5 லட்சம் கிடைக்கும்! அட்டகாசமான போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

அஞ்சலக வைப்புத்தொகை அதாவது POTD. இது 5 ஆண்டு காலத்துக்கான திட்டம். இத்திட்டம் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் 7.5% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தேசிய சேமிப்புச் சான்றிதழ் அதாவது NSC. இந்த திட்டமும் 5 வருட காலத்துக்கானது. இது 7.7% வட்டி வழங்குகிறது.

அடுத்து மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமான SCSS. இத்திட்டம் மூத்த குடிமக்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது என்பதால் 8.2% வட்டி வழங்குகிறது. ஆகையால் இத்திட்டங்களில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news