கம்மி விலையில் தங்கம் கிடைக்கும் 6 நாடுகள் இதுதான்

இந்தியாவில் தங்க விலை நாளுக்கு நாள் அதிகரித்து, வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சவரன் தங்கம் ரூ. 1 லட்சத்தை நெருங்கியுள்ளதால், நகை பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், சில வெளிநாட்டு நாடுகளில் இந்தியாவில் விட குறைந்த விலையில் தங்கம் கிடைக்கிறது. எந்தெந்த நாடுகளில் தங்கம் மலிவாக கிடைக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

துபாய்

அக்டோபர் 2025-ல், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு சுமார் ரூ.1,14,740 விலையில் கிடைக்கிறது. இது இந்தியாவின் ரூ.1,30,910 விலையைவிட மிகவும் குறைவு. துபாயில் ஜிஎஸ்டி இல்லை. இறக்குமதி வரிகள் குறைவு மற்றும் உற்பத்தி செலவுகள் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் குறைவு என்பதால் விலை மலிவாக உள்ளது.

அமெரிக்கா

24 காரட் தங்கம் 10 கிராமுக்கு சுமார் ரூ.1,15,000 மதிப்பில் கிடைக்கிறது. அமெரிக்காவில் இந்தியாவைவிட சுங்க வரிகள் மற்றும் உற்பத்தி கட்டணங்கள் குறைவு. மேலும், டாலர் வலுப்பெறும் போது உலக சந்தையில் தங்கம் குறைந்த விலையில் கிடைக்கும்.

ஹாங்காங்

ஹாங்காங் தங்கத்திற்கான வரி அல்லது VAT இல்லாத இடமாகும். 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,13,000 மதிப்பில் கிடைக்கிறது. ஆசியாவில் மலிவான தங்க விலை கொண்ட இடங்களில் ஒன்று ஆகும்.

சிங்கப்பூர்

24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,18,880 விலையில் கிடைக்கிறது. ஜிஎஸ்டி இல்லாத கொள்கை மற்றும் குறைந்த உற்பத்தி செலவுகள் காரணமாக இந்தியாவைவிட விலை 5-8% குறைவு. சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் 7% ஜிஎஸ்‌டியில் சலுகைப் பெறும் வாய்ப்பு உள்ளது.

குவைத்

24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,13,570 மதிப்பில் கிடைக்கிறது. குறைந்த வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் காரணமாக விலை குறைவு. குவைத் எண்ணெய் வளம் அதிகம் மற்றும் நாணய நிலைத்தன்மை விலையை நிலை நாட்டுகிறது. ஆனால் குவைத்திலிருந்து தங்கம் கொண்டு செல்வதில் ஆண்கள் 20 கிராம், பெண்கள் 40 கிராம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

துருக்கி

24 காரட் தங்கம் 10 கிராமுக்கு சுமார் ரூ.1,13,040 ஆகும். குறைந்த இறக்குமதி வரி, VAT இல்லாதது காரணமாக விலை மலிவாக உள்ளது. 10 முதல் 21 காரட் வரை தங்க பொருட்கள் கிடைக்கிறது.

Related News

Latest News