முள்ளங்கியில் வைட்டமின் சி, ரைபோபிளவென், ஃபோலிக் அமிலம், ஜிங்க், மக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகள் தரும். இருப்பினும் முள்ளங்கியுடன் சேர்த்துப் சாப்பிடக் கூடாதான சில உணவுகள் உண்டு. அவை என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
முள்ளங்கியின் நன்மைகள் மற்றும் பிரச்சனைகள்
குளிர்காலத்தில் முள்ளங்கி சாப்பிட அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் நீரிழிவு பிரச்சனைகளை குறைக்கும். ஆனாலும், சிலர் முள்ளங்கியின் வாசனை காரணமாக தவிர்ப்பர். சிலருக்கு சாப்பிட்டதும் வாய்வீக்கம், ஏப்பம், வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
முள்ளங்கியுடன் சேர்க்கக் கூடாத உணவுகள்
பால்
பால் மற்றும் முள்ளங்கி சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் பால் உடலுக்கு குளிர்ச்சியை தரும் போது, முள்ளங்கி உடலை வெப்பமாக மாற்றுகிறது. இதனால் நெஞ்செரிச்சல், அஜீரணம், வாயு அதிகரிப்பு போன்றவை ஏற்படும்.
Also Read : அடிக்கடி வாய் உலர்ந்து போவது நீரிழிவு நோயின் அறிகுறியா? அலட்சியம் வேண்டாம்
டீ மற்றும் காபி
முள்ளங்கி சாப்பிட்ட பின்னர் டீ மற்றும் காபி உடனுக்குடன் குடிக்கக்கூடாது. இவை அமிலத்தன்மையை அதிகரித்து செரிமானத்தில் பிரச்சனைகளை உண்டாகும்.
வெள்ளரிக்காய்
சிலர் முள்ளங்கியுடன் வெள்ளரிக்காயை சாலட் போன்றவாறு சேர்த்து சாப்பிடுவர். இதுவும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரண்டிலும் அதிகமான வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து செரிமானமான இடர்பாடுகளை உண்டாக்கும்.
Also Read : உங்கள் கண்களை பலவீனப்படுத்தும் 3 பழக்கங்கள் இதுதான்
சிட்ரஸ் பழங்கள்
முள்ளங்கியுடன் சிட்ரஸ் பழங்கள் சேர்த்து சாப்பிடுவது தவிர்க்கவேண்டும். இதனால் அதிகமான அமிலத்தன்மை மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
பாகற்காய்
முள்ளங்கி மற்றும் பாகற்காயுடன் சேர்த்து கூடாது. ஏனென்றால் இரண்டிலும் அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து இருப்பதால் உடலில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
