ஆரோக்கியமான வாழ்க்கைக்காக சரிவிகித உணவுகள் மிகவும் அவசியம். இவை உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தவும் உதவுகின்றன. அந்த வகையில் உடலுக்கு அத்தியாவசியமான அனைத்து ஊட்டச்சத்துகளையும் தினமும் பெறுவதற்கான சில முக்கிய உணவுகளை இங்கு காணலாம்.
சியா விதை
இரண்டு ஸ்பூன் சியா விதையிலிருந்து தினசரி தேவையான 95% மக்னீஷியம் கிடைக்கிறது. இது தசைகளை வலுப்படுத்த உதவும்.
கொய்யாப்பழம்
ஒரு கொய்யாப்பழம் மூலம் தினசரி தேவையான 100% வைட்டமின் சி கிடைக்கும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும், தோலைச் சுகாதாரமாக வைத்திருப்பதற்கும் இது உதவுகிறது.
ப்ரோகோலி
ஒரு சிறிய அளவு ப்ரோகோலி சாப்பிட்டால் தினசரி தேவையான முழுமையான வைட்டமின் கே கிடைக்கும். இது பல், எலும்பு வலிமைப்படுத்தவும் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் முக்கியமாக அமையும்.
பூசணி விதை
இரண்டு ஸ்பூன் பூசணி விதையிலிருந்து தினசரி தேவையான 60% துத்தநாகம் (ஜிங்க்) கிடைக்கும். இது காயங்களை குணப்படுத்தவும், ரத்த ஓட்டத்தைச் சரிசெய்யவும் உதவும்.
கருப்பு எள்
ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளிலிருந்து தினசரி தேவையான 100% காப்பர் கிடைக்கும். காப்பர் இரும்புச் சத்தை உடல் உறிஞ்சிக் கொள்ளவும் இளநரையை சரிசெய்து கருப்பாக்கவும் பயன்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)