Wednesday, February 18, 2026

வைரமுத்துவை நோக்கி காலனி வீசப்பட்டதால் பரபரப்பு

திருப்பூரில் தனியார் விழாவில் பங்கேற்பதற்காக, கவிப்பேரரசு வைரமுத்து வருகை தந்தார் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி திடீரென தான் காலில் அணிந்திருந்த 2 செருப்புகளையும் கழட்டி வைரமுத்துவை நோக்கி வீசியுள்ளார்.

இதில் நல்வாய்ப்பாக செருப்பு வைரமுத்து மீது படாமல் தள்ளி விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தொடர்ந்து வழக்கறிஞர்கள் வைரமுத்துவை பாதுகாப்பாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Related News

Latest News