Friday, December 26, 2025

இனி வார் ரூம் அரசியல் இருக்கக் கூடாது..அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கு ஷாக் கொடுத்த நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழக பாஜ தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமைந்தது.

நயினார் நாகேந்திரன் தலைவராக ஆன பிறகும், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் வார் ரூம்கள் மூலம் அதிமுகவை குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் பாஜவில் இனி வார் ரூம் அரசியல் இருக்கக் கூடாது என்று எச்சரித்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் விமர்சிக்கக் கூடாது. கட்சியின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். நயினார் நாகேந்திரனின் இந்த அதிரடி உத்தரவு அண்ணாமலைக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News