தமிழக அரசு சார்பில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் இலவச லேப்டாப்கள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 5 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினால் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் செலவில் இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த லேப்டாப்கள் அனைத்தும் ஏசர் , டெல் , HP போன்ற சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களிலிருந்து , தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
இலவச லேப்டாப்களை வாங்கிய சில மாணவர்கள , அதில் இடம் பெற்றுள்ள ஸ்டாலின் மற்றும் கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்களை நீக்கி தங்களுக்கு பிடித்த படங்களை வைத்து வருகின்றனர். இப்படி செய்தால், லேப்டாபுக்கான வாரண்டி கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
