விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
விஜய் பேசியது திரைப்பட வசனம் போல இருக்கிறது. இது நல்ல அணுகுமுறை அல்ல. விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. உருக்கமாக பேசி விஜய் வீடியோ வெளியிட்டிருக்க வேண்டும்.திரைக்கவர்ச்சி நாட்டை ஆள முயற்சிக்கிறது.
திரை மயக்கம், திரை போதையில் உள்ளனர். விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்? சி.எம். சார் என விஜய் கூறியது சிறுபிள்ளைத்தனம். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று எந்த கட்சியும் தெரிவிக்கவில்லை என்றார்.