கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த சபாநாயகர் அப்பாவு, நாகர்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில்,உ லக அளவில் ஒரு நாடு கூட பாகிஸ்தானை கண்டிக்கவில்லை என்பதே நமது பலவீனம் என்று கூறினார்.
நாட்டின் வெளியுறவு கொள்கை மிகவும் பலவீனமாகி இருப்பதாகவும் அப்பாவு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எங்கும் கிடையாது என்றும், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது யார் என்பது மக்களுக்கே நன்றாக தெரியும் எனவும் அப்பாவு தெரிவித்தார்.