தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த வாரம் மார்ச் 6 ஆம் தேதியில் இருந்து 3 நாள்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும் ரூ.1000 கோடிக்கும் முறைகேடு நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது : “எந்த முகாந்திரமும் இல்லாமல் டாஸ்மாக்கில் ஊழல் என குற்றம் சாட்டப்படுகிறது. ஒருவர் ரூ.1000 கோடி ஊழல் எனச் சொல்கிறார். மற்றொருவர் ரூ.40,000 கோடி முறைகேடு என்று சொல்கிறார். பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவுகிறது. டெண்டரில் எந்த விதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை.
மதுபானக் கொள்முதலில் யாருக்கும் சலுகைகள் காட்டப்படவில்லை. நாங்கள் புதிய கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கவில்லை. ஏற்கனவே செயல்பட்டு வந்த கொள்கையில் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறது.” என அவர் விளக்கமளித்துள்ளார்.