ஆடிப்பெருக்கு தினத்தன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம். ஆனால் இந்த முறை ஆடிப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமையான நாளை வருவதால் பத்திரப்பதிவுகள் நடக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 2ந்தேதி முகூர்த்த நாளன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள், பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு வேண்டாம் என்று பத்திரப்பதிவு துறை முடிவு செய்துவிட்டது என்றும் அந்த அடிப்படையில் ஆடிப்பெருக்கு நாளன்று பதிவுகள் கிடையாது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.