தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ’’ஓரணியில் தமிழ்நாடு’’ என்ற பிரச்சாரத்தை திமுகவும் ’’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’’ என்ற பிரச்சாரத்தை அதிமுகவும் தொடங்கியுள்ளது.
நேற்று அரியலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பாமக, அதிமுக கூட்டணிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருக்கும் சூழலில் 2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் என்று பாஜக கூறிவருகிறது. ஆனால் அதிமுகவோ, ’’கூட்டணி ஆட்சியெல்லாம் இல்லை; நாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம்’’ என்று விடாப்பிடியாக சொல்லி வருகிறது.