Tuesday, February 17, 2026

தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்பு : வெளியான புது தகவல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார்.

ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் எதிர்கொண்டு வரும் சூழலில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுச் சின்னம் கோரி தவெக சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பம் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும், அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தாலும் தேர்தல் ஆணைய விதிகளின்படி தேவையான கணக்குகளை தவெக தாக்கல் செய்துள்ளதால், பொதுச் சின்னம் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தவெக சார்பில் அளிக்கப்பட்ட பொதுவான 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலில் ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் போன்ற சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு சின்னம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என தவெக தொண்டர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Related News

Latest News