இளம் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை குடியரசுத் தலைவர் முர்முவிடம் இருந்து பெற்றார் 14 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.
ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் அறிமுகமாகி, அதிரடி சாதனை்ளை படைத்தவர் 14 வயது இளம் வீரர் சூர்யவன்ஷி. விஜய் ஹசாரே தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்ததன் மூலம், இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இந்நிலையில் 14 வயதிலேயே பல சாதனைகளை படைத்த சூர்யவன்ஷிக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. இளம் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை, குடியரசுத் தலைவர் முர்முவிடம் இருந்து வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.
