Thursday, February 5, 2026

திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்., பயனாளர்கள் அவதி

பிரபல சமூக வலைதளமான ‘எக்ஸ்’ முடங்கியுள்ளதால் பயனாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

டவுன் டிடெக்டர் வெளியிட்ட தகவலின்படி, சுமார் 64 சதவீத பயனர்கள் வலைத்தளத்தை அணுகுவதில் சிக்கல்கள் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், 23 சதவீத பயனர்கள் செயலியில் (ஆப்) கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும், 13 சதவீதம் பேர் உள்நுழைவு அல்லது வெளியேறுவதில் சிக்கலை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய அளவில் பார்க்கும்போது, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் X சேவையில் அதிக அளவிலான செயலிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News