போக்குவரத்து வசதியால் உலகமே சுருங்கிவிட்டது என்பார்கள்.
செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலமே உள்ளங்கைக்குள்
வந்துவிட்டது என்றால், மிகையல்ல..
செல்போன் இந்தியாவுக்குள் வந்தபோது செங்கல் அளவில் மிகப்பெரியதாக
இருந்தது. நாளடைவில் செல்போன் சைசும் சிறியதாக வரத்தொடங்கிவிட்டது.
கைக்கு அடக்கமாக இருந்ததால் பெருத்த வரவேற்பைப் பெற்றதுடன்,
செல்போன் என்று சொல்வதற்குப் பதிலாக கைபோன் என்று சொல்லுமளவுக்கு
அதன் வடிவமும் உபயோகமும் மாறிவிட்டது.
தற்போது மீண்டும் பழைய நிலை திரும்புகிறது. பெரிய வடிவிலான
ஆன்ட்ராய்டு போன் வைத்திருந்தால்தான் அந்தஸ்து என்னும் நிலைமை
உள்ளது. ஆனாலும், கைக்கு அடக்கமான செல்போன்களும் சந்தைக்கு
வந்தவண்ணம் உள்ளது.
அந்தவகையில் தற்போது உள்ளங்கை அளவே உள்ள ஸ்மார்ட் போன்
ஒன்று அறிமுகமாகியுள்ளது. பார்ப்பதற்கு ஐபோன் போன்று உள்ள இந்த
ஸ்மார்ட் போனை MONY MIST என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
3GB ROM, 32 GB STORAGE வசதிகொண்டுள்ள இந்த போன்
ஆன்ட்ராய்டு 9 வெர்ஷனில் வருகிறது.
மிகவும் மெல்லியதான இந்த ஸ்மார்ட் போன் 89,5 மில்லி மீட்டர்
நீளமும், 45,5 மில்லி மீட்டர் அகலமும், 11,5 மில்லி மீட்டர் தடிமனும்
கொண்டு வடிவமைக்கப்பட்டது.
3 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ள இந்த 4ஜி ஆன்ட்ராய்டு போன்
13 மெகா பிக்சல் கேமராவை உள்ளடக்கியுள்ளது. மொத்த விலைக்கு
விற்கும்போது 99 டாலருக்கும், சில்லரை விற்பனைக்கு 150 டாலருக்கும்
கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
75 கிராமுக்கும் குறைவான எடையுள்ள, உலகின் மிகச்சிறிய இந்த
கையடக்க போன் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.