Tuesday, July 29, 2025

உலகின் முதல் வங்கி

உலகின் பழமையான வங்கிகளுள் ஒன்றாக மொராக்கோ
நாட்டின் அமாஸை சமூகம் பயன்படுத்திய வங்கி உள்ளது.

இந்த வங்கி எப்போது தொடங்கப்பட்டது என்பதைக்
கணிக்க முடியவில்லையென்றாலும், முற்றிலும் சிதல
மடையாமல் அந்தக் கட்டடத்தின் உள்பகுதி அறைகள்
அப்படியே உள்ளது.

மேற்பகுதி மட்டும் சிதிலமடைந்து மிகப்பழமையான
வங்கி என்பதற்கு அடையாளமாக விளங்குகிறது.

மிகப்பெரிய அரண்மனைபோல் காணப்படும் இந்த
வங்கிக் கட்டடம் செம்மண் நிறத்தில் உள்ளது. பல
அடுக்குகள், பல கட்டடங்கள், பலப்பல அறைகளுடன்
இன்றைய நவீன வங்கிக்கு இணையாகக் கட்டப்பட்டுள்ளது.

பழைமையான இந்த வங்கிக் கட்டடத்துள் வைக்கப்பட்டிருந்த
சில பானைகள் உடைந்து சிதறாமல் அப்படியே உள்ளது.
இந்நாட்டின் மலைத்தொடர்கள் எத்தனைக்காலம் பழமையானதோ
அத்தனைக்காலம் இந்த வங்கியும் பழமையானது என்று கருதப்படுகிறது.

மதிப்புமிக்க ஆவணங்கள், beriberi தானியங்கள்,
எண்ணெய், நகைகள் போன்றவற்றைப் பாதுகாக்க இந்த
வங்கிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மொராக்கோ வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு.
தற்போது சுமார் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை
கொண்ட இஸ்லாமிய நாடு. மொராக்கோ என்பதற்குக்
கடவுளின் நிலம் எனப் பொருள் என்கிறார்கள்.

கிமு 8 ஆயிரத்துக்கு முற்பட்ட நாடாக மொராக்கோ கருதப்படுகிறது.
மொராக்கோவின் பெரும்பாலான பகுதிகள் மலைத்தொடராக உள்ளது.
என்றாலும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது இந்நாடு.
வருடத்தின் பெரும்பாலான நாட்களில் இந்நாட்டை உறைபனி மூடியே இருக்கும்.

தற்போது வடக்கு ஆப்பிக்காவில் பொருளாதாரத்தில் வளர்ந்த
5 ஆவது நாடாக மொராக்கோ உள்ளது. சுரங்கத் தொழில், கட்டுமானம்,
நெசவுத்தொழில், சுற்றுலா, தொலைத்தொடர்பு, சேவைத் துறையும்
இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News