Friday, January 3, 2025

தலைமுடியால் பேருந்தை இழுத்த பெண்

https://www.instagram.com/reel/CYR0rbMKGCn/?utm_source=ig_web_copy_link

தலைமுடியால் பேருந்தை இழுத்து சாதனை படைத்துள்ளார் ஓர் இளம்பெண்.

பஞ்சாபைச் சேர்ந்த ஆஷா ராணி என்னும் அந்த இளம்பெண், இத்தாலி நாட்டின் மிலன் நகரில், 12 ஆயிரம் கிலோ எடையுள்ள டபுள் டெக்கர் பேருந்தைத் தனது தலைமுடியில் கட்டி, மிகச்சாதாரணமாக இழுத்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்..

இதற்குமுன் பளு தூக்குதல் உள்பட ஏழு உலக சாதனை படைத்துள்ளார் ஆஷா ராணி.
அதில் 2013 ஆம் ஆண்டில் 1,700 கிலோ எடையுள்ள வாகனத்தைத் தனது காதுகளால் இழுத்து சாதனை நிகழ்த்தியதும் அடங்கும். தற்போது டபுள் டெக்கர் பேருந்தை இழுத்து அசாத்திய சாதனை புரிந்ததன்மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஆஷா ராணி.

மன வலிமையும் உடல் வலிமையும் மிக்கவர்கள் பெண்கள் என்று நிரூபித்துள்ளார் ஆஷா ராணி.

வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் இந்த சாதனையைப் புரிவீர்கள்தானே?

Latest news