Friday, February 13, 2026

பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ வெளியிட்ட பெண் கைது

கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் (42), ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தீபக்குடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், தீபக் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஷிம்ஜிதா குற்றம்சாட்டினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து கடுமையான மன உளைச்சலில் இருந்த தீபக் கடந்த ஞாயிறு அன்று தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து தீபக்கின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் ஷிம்ஜிதாவின் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்துள்ளனர். வடகராவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் இருந்த போது அங்கு வந்த போலீசார் ஷிம்ஜிதாவை கைது செய்துள்ளனர்.

Related News

Latest News