மைக்கேல் ஜாக்ஸனின் ஆவியைத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ள ஒரு பெண், மைக்கேல் ஜாக்ஸன் தன்னைத் தொடாமலிருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தன்னை மர்லின்மன்றோவின் மறுபிறவி என்று கூறிக்கொள்கிறார் டிக்டேக் பிரபலமான கேத்தலின் ராபர்ட்ஸ் என்னும் பெண். இவர், 2009 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக 50ஆவது வயதில் மரணமடைந்துவிட்ட பாப் நட்சத்திரமான மைக்கேல் ஜாக்ஸசனின் ஆவியைத் திருமணம் செய்துகொண்டதாக நம்புகிறார்.
இதுதொடர்பாக மைக்கேல் ஜாக்ஸன் பேயின் மனைவி என்று தலைப்பிட்டு அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், நான் பேய்க்கு மிகவும் பிடித்தமானவள். உலகின் மிகப்பிரபலமான மனிதர் எப்படி என் வாழ்வில். அவர் இறந்தபிறகு எப்படி வந்தார் என்பதற்கான உண்மைக்கதை என்ற முன்னுரையோடு தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து அவர் எழுதியுள்ள விஷயங்கள் வியக்க வைக்கின்றன..
அவர் என்மீது பிடிவாதமாக இருக்கிறார். ஓய்வெடுக்காமல் என்னோடு வாழ்ந்து கணவராக என்னுடன் தொடர்புகொள்வதை ரசிக்கிறார். என்னுடன் அமர்ந்து சாப்பிட விரும்புகிறார். நான் அவரை முத்தமிட்டால் அல்லது காதல் செய்ய முயன்றால், சிலந்திப் பார்வை, இறந்த சடலத்தின் பார்வையால் என்னைப் பயமுறுத்துகிறார்.
நான் செய்யும் தவறுகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுகிறார் என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ள கேத்தலின், அவர் என்னை மனைவியாகத் தேர்ந்தெடுத்ததை சிறப்பாக உணர்கிறேன். எங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. ஆனால், உன்னை நேசிப்பதை நிறுத்த முடியாது என்று முடிக்கிறார்.
பிரபலமாவதற்குப் பலரும் பலவிதமான செயல்களைச் செய்வார்கள். ஆனால், இந்தப் பெண்மணி செய்துள்ளதோ கேலிக்குள்ளாகியுள்ளது.
சில மாதங்களுக்குமுன்பு வெளியான கேத்தலின் கடிதம் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீக்கப்பட்டுவிட்டாலும், இந்தச் செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.