Tuesday, January 27, 2026

மனித உயிரைக் காப்பாற்றிய கைக்கடியாரம்

மின்சாரப் பைக்கிலிருந்து கீழே விழுந்தவரை கைக்கடியாரம் காப்பாற்றிய சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹெர்மோசா கடற்கரைக்கு ஒருவர் மின்சாரப் பைக்கில் சமீபத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இரவு நேரம் 1.30 மணி. அந்த சமயத்தில் ஏற்பட்ட விபத்தில் மின்சாரப் பைக்கில் சென்றுகொண்டிருந்தவர் பைக்கிலிருந்து கீழே விழுந்துவிட்டார்.

உடனடியாக, அவர் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் 911 என்னும் எண்ணை டயல் செய்தது. அந்த எண் ஹெர்மோசா கடற்கரைக் காவல் நிலைய உதவி எண் ஆகும். அதைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்துக்குப் போலீசார் விரைந்துசென்றனர்.

அங்கு, ஒருவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டனர் அவரின் தலையிலிருந்து ரத்தம் ஒழுகிக்கொண்டே இருந்தது. அவருக்கு காவல்துறையினர் முதலுதவி சிகிச்சையளித்து, தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

பல நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, குணமடைந்த அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

தொழில்நுட்பம் பல நேரங்களில் உயிரைக் காக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது

.

Related News

Latest News