பட்டியலின பெண்கள் விடுதியில் கண்மூடித்தனமாக தாக்கிய வார்டன்

தெலங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டத்தில் பட்டியலின பெண்கள் விடுதியில், ஒரு மாணவியை விடுதி வார்டன் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 24 ஆம் தேதி, விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் மாணவிக்கும், வார்டனுக்கும் இடையே சிறிய வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் பொறுமை இழந்த வார்டன், ஒரு தடியை எடுத்து கொண்டு மாணவியை கண்மூடித்தனமாக தாக்கினார்.

சக மாணவிகள் அவரை தடுக்க முயற்சித்த போதிலும், வார்டன் இரக்கமின்றி மாணவியை தாக்கினார். இதுதொடர்பான வீடியோ அண்மையில் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், பூபாலப்பள்ளி மாவட்ட ஆட்சிய ரகுல் ஷர்மா, விடுதி வார்டன் பவானியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Related News

Latest News