Friday, March 14, 2025

நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம் : சந்திரகுமார் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி பின்னடைவை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் “நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். திமுக யாரைக் கண்டும் அஞ்சியதில்லை” என பேசியுள்ளார்.

Latest news