சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாக ஆளும்கட்சியினர் புகார் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
மாநில அரசின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரையின்படியே ஆளுநர் செயல்பட முடியும். ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது, அதற்கு அரசியலமைப்பில் இடமில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
தமிழக ஆளுநருக்கு எதிராக வெளியான தீர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், உச்சநீதிமன்ற கருத்தில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என கூறினார்.