விமான பயணங்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகளை டிஜிசிஏ எனும் பொது விமான போக்குவரத்து இயக்குநரகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விமானங்களில் பவர்பேங்க் பயன்படுத்தி செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்ய தடை போடப்பட்டுள்ளது.
விமானத்தில் பவர் பேங்க் கொண்டு செல்லலாம். ஆனால் விமானத்திற்குள் அதை பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ அனுமதி இல்லை. லித்தியம் பேட்டரிகள் கொண்ட பவர் பேங்குகள் விமானத்தின் உள்ளே தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பவர் பேங்குகளை செக்-இன் லக்கேஜ்களில் வைக்க கூடாது. கையோடு வைத்திருக்கும் கேபின் பேக்குகளில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
