Monday, December 22, 2025

அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி… எடப்பாடி பழனிசாமி சொன்னது என்ன?

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். இதில் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சிலரும் தங்களது கொடியை ஏந்தி நின்றனர்.

அப்போது கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அது வெற்று கூட்டணி. ஆனால் நமது கூட்டணி வெற்றி கூட்டணி.

இதோ பாருங்கள் “கொடி (தவெக) பறக்குது… பிள்ளையார் சுழி போட்டாங்க…” எழுச்சி.. ஆரவாரம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே குமாரபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தின் ஆரவாரம் உங்களுடைய செவிகளை துளைக்கும்.

கரூரில் திட்டமிட்டு சதி நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இதனால் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை தேவை என வலியுறுத்தி வருகிறோம். அப்போது தான் இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்ற உண்மை வெளிவரும்” என்று கூறினார்.

Related News

Latest News