Sunday, December 21, 2025

லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

கோவை, பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குமார். இவர் நேற்று இரவு துடியலூர் சாலையில் இருந்து சரவணம்பட்டி சாலையை இணைக்கும் பகுதிக்கு சென்ற போது ஓட்டுநர் குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென எதிர் திசையில் சென்றுகொண்டிருந்த நான்கு கார்கள் மீது மோதியது. இதையடுத்து ஓட்டுநர் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லாரி ஓட்டுநர் குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த திடீர் விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related News

Latest News