எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கான ரெயில் கட்டணத்தை இந்திய ரெயில்வே உயர்த்தியுள்ளது.
குளிர்சாதன வசதி உள்ள மற்றும் இல்லாத முன்பதிவு பெட்டிகளுக்கு, ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2 காசுகள் வீதம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 1 காசு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த கட்டண உயர்வு தேஜஸ், சதாப்தி, ராஜ்தானி, வந்தே பாரத், அந்தியோதயா, வந்தே மெட்ரோ, அம்ரித் பாரத் உள்ளிட்ட அனைத்து முக்கிய ரெயில்களுக்கும் பொருந்தும். இந்திய ரெயில்வே அறிவித்த இந்த புதிய கட்டண உயர்வு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
புறநகர் மின்சார ரெயில்களின் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று ரெயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
