குறிப்பிட்ட நேரத்துக்கு 20 நிமிடம் முன்னதாகவே நிலையத்துக்கு ரயில் வந்துசேர்ந்ததால்,
உற்சாகமடைந்த பயணிகள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தியாவில் அநேக ரயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு நிலையத்தை வந்தடைவதில்லை.
மணிக்கணக்காகவோ நிமிடக் கணக்காகவோ தாமதமாக வந்தடைவதே வழக்கமாக
உள்ளது. இந்த நிலையில் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள ரத்லம் ரயில் நிலையத்துக்கு
மே மாதம் 25 ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு பாந்த்ரா ஹரித்வார் ரயில், அதன் திட்டமிட்ட
நேரத்துக்கு 20 நிமிடத்துக்கு முன்னதாக வந்துசேர்ந்தது.
ரயில் தனது இலக்கை முன்கூட்டியே அடைந்தது பலரை ஆச்சயரித்திலும் மகிழ்ச்சியிலும்
ஆழ்த்தியது. எதிர்பாராத இந்தத் தருணத்தை நடைமேடையில் வெவ்வேறு வயதுப் பயணிகள்
நடனமாடி மகிழ்ந்துள்ளனர்.
இந்த வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவே தனது முகநூல்
பக்கத்தில் பகிர்ந்துள்ளதுதான் இன்னும் ஆச்சரியம்.