Tuesday, February 24, 2026

வியாபாரியை வெட்டி விட்டு தப்பி ஓடிய ரவுடி ., சுட்டுப்பிடித்த போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 55). இவர் குறிஞ்சிப்பாடி இரயில்வே கேட் பகுதியில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

பொங்கல் பண்டிகைக்காக கடையினை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், காய்கறி வாங்குவது போல வந்து ரமேஷை அரிவாளால் தலை, தோள்பட்டை, கை, கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரமேஷை, அவரது உறவினர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, அவர் மேல சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார்.

தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்

இந்நிலையில் இன்று குறிஞ்சிப்பாடி, போலீசார், ரவுடி சுபாஷ்காரை பிடிக்க முயன்றனர். அப்போது, அந்த ரவுடி தனது கையில் இருந்த அரிவாளால் போலீசை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் விஜயகுமார் தனது துப்பாக்கியால் குற்றவாளியின் வலது காலில் சுட்டு பிடித்தனர்.

இதில், காயமடைந்த போலிசார் மற்றும் ரவுடி ஆகியோர் சிகிச்சைக்காக நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News