2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன்படி இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது. விருப்பமனு விநியோகம் 12 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில் 2.30 மணிக்குள் மனுக்கள் காலியானதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். விருப்பமனு காலியானதால் தொண்டர்களை நாளைக்கு வரும்படி நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.
