Wednesday, October 1, 2025

“கட்டமைப்பை தவெக வலுப்படுத்த வேண்டும்”.. காமெடி நடிகர் தாடி பாலாஜி..

கரூரில் உள்ள வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக பரப்புரையில் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர் பல்வேறு அரசியல் கட்சியினர் கட்சித் தலைவர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரில் பார்வையிட்டனர். அந்த வகையில், தவெக தலைவரின் நண்பரும், காமெடி நடிகருமான தாடி பாலாஜி கரூர்,வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்த பின்பு உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதில்; மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்துள்ளது அது நடக்கும் பொழுது நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். அதனை நான் டிவியில் பார்க்கும்போது எனக்கு பதறியது.மேலும், குழந்தைகள் அதிக அளவு உயிரிழந்து உள்ளார்கள் என்று கேள்விப்பட்டேன் எனக்கு மனதைக் கேட்கவில்லை.

நேற்று உடல்நிலை சரியாகி மருத்துவமனையில் இருந்து இன்று காலை கிளம்பி சம்பவம் நடந்த இடத்தை பார்த்து பிறகு உயிரிழந்தவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தேன். தவெக தலைவர் விஜய் எவ்வளவு மன உளைச்சலில் இருப்பார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

நான் வந்ததற்கு இன்னொரு காரணம் என்னவென்றால் நான் இங்கு அதிகளவு சூட்டிங் வந்துள்ளேன் இங்கு எனக்கு அதிகரும் நண்பர்கள் உள்ளனர். இதைத்தாண்டி முக்கியமான விஷயம் என்னவென்றால் பகிரங்கமாக சொல்கிறேன் என்னுடைய தலைவருக்காக தான் இங்கு வந்துள்ளேன்.

இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று அவரே நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். தவெக தலைவருக்கு 100% எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. இரண்டாம் கட்டமாக உள்ள தலைவர்கள் இவ்வளவு அஜாக்கிரதையாக உள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இந்த இடத்தை பார்த்து உள்ளனர். இந்த இடத்தை கொடுத்துள்ளனர் இந்த இடத்தை ஆய்வு செய்துள்ளனர்.

இந்த நேரத்தில் நீங்கள் வந்தால் சரியாக இருக்கும் என்று இரண்டாம் கட்ட தலைவர் தான் தலைவரிடம் சொல்ல வேண்டும், சூட்டிங் இருக்கு 7 மணிக்கு என்றால் 6: 30க்கு வந்து விடுவார் அதுதான் விஜய் தாமதமாக வந்ததும் ஒரு காரணம். இரண்டாம் கட்ட தலைவர்கள் பொதுச் செயலாளர் ஆதாவ் அர்ஜுன், நிர்மல் குமார் இவர்களுக்கு அரசியல் நன்றாக தெரியும் ஆனால் ஒரு தலைவரை வழி நடத்துவதில் ஏன் தவறுகின்றனர்.

இப்போது கூட தலைவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் நிர்வாகிகள் எதுவும் செய்யாதீர்கள் என்று கூறுகின்றார் அதிலும் கூட யாரையும் விட்டுக் கொடுக்க மாட்டார். கட்டமைப்பை தவெக வலுப்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கண்டிப்பாக வருந்து விஜய் பார்ப்பார் என்று கூறினர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News