வாரத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஏற்றத்துடன் பங்குச்சந்தை தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் 75 ஆயிரம் புள்ளிகளுடனும் நிஃப்டி, 22 ஆயிரம் புள்ளிகளுடன் சரிவுடன் வர்த்தகம் ஆகிறது.
இந்திய பங்குச்சந்தையானது, கடந்தவாரம் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தது. இந்த நிலையில், இன்று முற்பகல் 11 மணி நிலவரப்படி தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி, 23 புள்ளிகள் வரை சரிந்து, 22 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் ஆகிறது.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 102 புள்ளிகள் வரை சரிந்து 75 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் ஆகிறது. காலையில் சென்செக்ஸ் ஏற்றத்துடன், நிஃப்டி இறக்கத்துடனும் தொடங்கிய நிலையில், முதலீட்டாளர்கள் கவனமுடன் முதலீடு செய்து வருகின்றனர்.