19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடந்து வருகிறது. ஏலத்தில் கேமரூன் கிரினின் பெயர் வந்தபோது, அவரை வாங்க பல அணிகள் போட்டியிட்டன.
ஏலத்தில் அவரை வாங்க சென்னை அணி ரூ.25 கோடி வரை சென்றது. ஆனால் இறுதியில், கேமரூன் கிரீனை 25.20 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 3-வது அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக கேமரூன் கிரீன் திகழ்கிறார்.
