திருச்சி, பாலக்கரை, பருப்புகாரதெருவில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது .
இந்த கூட்டத்தில் அமைப்பு செயலாளர் துரை செந்தில், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எம்.டி.பாபு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்
அப்போது நிர்வாகிகள் பலரும் மேடையில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஏறி நின்றதால் மேடை சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,. அதன் பின்னர் மேடைக்கு முன்பு நாற்காலிகளை போட்டு நிர்வாகிகள் அமர்ந்து தொடர்ந்து கூட்டத்தை நடத்தினார்கள்.
