ஆந்திர மாநிலம், அனகப்பள்ளி மாவட்டம் கோத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த குரு நாராயணமூர்த்தி (54) இவர், கடந்த டிசம்பர் 9 அன்று சாலையில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். முதலில் சாலை விபத்து என்று கூறப்பட்டது. ஆனால், தலையில் இருந்த காயங்கள் இருந்ததால் இதை சந்தேக வழக்காகப் பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், 6 மாதங்களுக்கு முன் நாராயணமூர்த்தியின் பெயரில் LIC உள்ளிட்ட நிறுவனங்களில் ரூ.1.08 கோடி மதிப்புள்ள காப்பீட்டு பாலிசிகள் பெறப்பட்டிருப்பது தெரியவந்தது. காப்பீட்டுத் தொகை பெற பேராசையடைந்த மருமகன் சுன்கரி மற்றும் பேரன் சுன்கரி ஜோதி பிரசாத் ஆகியோர், இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொன்றனர்.
இந்தக் கொலைக்கு உதவிய LIC முகவர் நானாஜி மற்றும் ததாஜி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 4 பேரை கைது செய்த போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
