உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இந்த சூழலில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பொருளாதார ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசி இருந்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஜெலென்ஸ்கியுடன் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினோம். இதில் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்தோம் என்று கூறினார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைன் அமைதிக்கு தயாராக உள்ளது என்று கூறினார்.
