உத்தரபிரதேசம், வாரணாசியில் உள்ள காசி ரோப்வே இந்தியாவின் முதல் நகர்ப்புற ரோப்வே சுமார் ₹800 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரோப்வே திட்டம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. தற்போது அது சோதனை கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சோதனை ஓட்டத்தின்போது ரோப்வே, சாலையின் நடுவில், அந்தரத்தில் ஊசலாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
