தங்கம் விலையில் நிலையற்றத்தன்மை நிலவுவதால், நகைக்கடன் தொகையை குறைத்து வழங்க வேண்டும் என வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையும் போது, வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவதில்லை. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, நகைக்கடன் மீதான இடர்மேலாண்மை அதிகரித்துள்ளதால், தங்கநகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது நகைகள் அடகு வைக்கும் போது, தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72 சதவிகிதம் வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் 60 முதல் 65 சதவிகிதம் வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
