Monday, February 16, 2026

தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமாவை தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.45 மணிக்கு தமிழ், இந்தி , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் படத்தின் முன்பதிவு நாளை தமிழகத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், “ஜனநாயகன்” படத்திற்கு, இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19ம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு சில காட்சிகளை நீக்கக் கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து படக்குழு அந்த காட்சிகளை நீக்கி மறு தணிக்கைக்கு அனுப்பியது. ‘ஜனநாயகன்’ வரும் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related News

Latest News