Sunday, July 27, 2025

உக்ரைனில்  மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் குவியும்  காரணம்  

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை நடத்தி  வருகிறது. அந்நாட்டில் தமிழர்கள் உள்பட இந்திய மாணவர்கள் கணிசமாக இருப்பதால், தமிழ்நாட்டிலும் உக்ரைன் விவகாரம் பெரிதும் கவனம் பெற்றுள்ளது. உக்ரைன் நாட்டில் படிக்கச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்களாகவே  இருக்கின்றனர்.

இந்தியாவில் பல மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு சென்று தமிழக மாணவர்கள் ஏன் படிக்க வேண்டும் என்கிற கேள்வி சமூகத்தில் எழுகிறது. இந்தியாவில் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே உக்ரைனில் படிப்பதற்கு தேவைப்படும். அதிகபட்சம் ரூ. 40 லட்சம் செலவில் இங்கு மருத்துவம் படிக்கலாம். செலவு குறைவு என்பதால் பலரும் உக்ரைனில் மருத்துவம் படிப்பதற்கு விரும்புகின்றனர்.பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்க விரும்பும் சிலர் அங்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் ஒன்றரை வருட படிப்பு ஒன்றை முடித்திருக்க வேண்டும் என்பதை  முதலில்  தெரியாமல் உள்ளனர் 

எல்லா வகையிலும் பார்க்கும்போது மருத்துவ படிப்புக்கு உக்ரைன் தான் சிறந்த தேர்வாக இருக்கும் என்ற எண்ணமும் மேல் ஓங்குவதாலும் இந்தியாவில் சொல்லித் தரும் பாடத்திட்டம்தான் உக்ரைனிலும் கற்றுத் தரப்படுகிறது என்பதாலும் உக்ரைனுக்கு படிக்கச் செல்கின்றனர் .

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news