தென்காசியில் அரசு பேருந்தின் பின்பக்க பாகம் உடைந்து ஆபத்தான முறையில் தொங்கியபடி ரோட்டில் உரசியடியே இயக்கப்படுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து செங்கோட்டைக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. சுரண்டை அண்ணா சிலை அருகே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின் பக்க பாகம் உடைந்து ரோட்டில் உரசி கொண்டே சென்றது.
பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பேருந்துகளில் உறுதி தன்மையை பராமரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் போக்குவரத்து நிர்வாகம் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.