கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்கூடப் பாடங்கள்
ஆன்லைன் மூலம் போதிக்கப்பட்டன.
இதனால், ஆன்ட்ராய்டுமூலம் நடத்தும் ஆசிரியர்கள் பாடங்களை
உண்டுஉறைவிடப் பள்ளியைப்போல், தங்கள் வீட்டிலிருந்தபடியே
மாணவர்கள் கற்றுவந்தனர்..
இந்தக் கற்பித்தல் முறைக்கு இடையூறாக சில இடங்களுள்
செல்போன் சிக்னல் கிடைக்காமல் போனது. செல்போன் சிக்னல்
கிடைக்காத பகுதிகளுள் வசித்த மாணவர்கள், ஆசிரியர்கள்
நடத்தும் பாடங்களைக் கற்கமுடியாத சூழல் நிலவியது.
இதனைத் தவிர்ப்பதற்காக ஒரு சிறந்த யோசனையை செயல்படுத்தினார்
கர்நாடக மாநில இளைஞர் ஒருவர்.
கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டம் சுற்றுலாத்தலங்கள்
நிறைந்த ஒரு சிறிய மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்திலுள்ள
பகுதிகள் பெரும்பாலும் கிராமப்புறப் பகுதிகளே. இங்கு எப்போதும்
மழைபெய்துகொண்டே இருப்பது ஆன்லைன்மூலம் கற்பிப்பதற்கு
ஒரு பிரச்சினையாக இருந்தது.
இங்கு நிறுவப்பட்டுள்ள செல்போன் டவர்கள் மழைக்காலத்துக்கு
முன்பும், காற்றாலை மின்சாரம் தடைப்படும்போதும் டீசலைக்
கொண்டு இயங்குபவையே.
டீசல் விலை அடிக்கடி அதிகரித்துக்கொண்டே இருப்பதாலும்,
பிஎஸ்என்எல் நிலைமை காரணமாகவும் சிலசமயம் டவர்களை
இயக்கமுடியாமல் போனது.
இந்த நிலையில், சதீஷ் என்ற ஆசிரியர் ஆன்லைன் மாணவர்களுக்கு
உதவ முன்வந்தார். ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்காகத் தனது சொந்தச்
செல்வில் உயரமான இடத்தில் மூங்கில் வீடு ஒன்றை உருவாக்கினார்.
இதற்காக சிக்காத்தூர் என்னும் கிராமத்தில் 20 அடி உயரத்தில் மூங்கில்,
மரப்பலகை, புல் கண்ணி வலை போன்றவற்றைப் பயன்படுத்தி மரத்தாலான
வகுப்பறையை நிறுவினார்.
இவ்வறையில் அமர்ந்து செல்போனைமூலம் பாடங்களை நடத்தினார்.
இதற்காகக் குறைந்த விலையில் 500 செல்போன் ஸ்டேண்டுகளை வாங்கி
நிறுவினார். மாணவர்களை ஈர்க்கும்விதமாக இவரின் கற்பித்தல் அமைந்தது.
உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த மர வகுப்பறையில் மூன்றுவிதக்
கரும்பலகைள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மூங்கில் இல்லத்திலிருந்து
பாடங்கள் போதிப்பது மட்டுமன்றி, யோகா பற்றிய தகவல், வீட்டிலிருந்தபடியே
விளையாடும் விளையாட்டுகள், ஆங்கில மொழி பற்றிய தகவல், கதை சொல்லுதல்,
செல்லப் பிராணிகள் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை மாணவர்களுக்குத்
தெரிவித்தார் ஆசிரியர் சதீஷ்.
மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொள்ள கோவிட் 19 வைரஸ் வழிசெய்துள்ளது.